மோடி பிரதமராகும்போது, தேஜஸ்வி யாதவ் முதல்வராகக் கூடாதா? - சத்ருகன் சின்ஹா கேள்வி

சத்ருகன் சின்ஹா
சத்ருகன் சின்ஹாமோடி பிரதமராகும்போது, தேஜஸ்வி யாதவ் முதல்வராகக் கூடாதா

பிஹார் முதல்வர் பதவிக்கான சலசலப்பு நிலவி வரும் நிலையில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி சத்ருகன் சின்ஹா ​குரல் எழுப்பியுள்ளார்.

எதிர்காலத்தில் பிஹாரில் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக வருவதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சத்ருகன் சின்ஹா, " ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி முதல்வராக ஆவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக முடியும் என்றால், தேஜஸ்விக்கு என்ன பிரச்சனை?. மக்கள் ஆதரவைப்பெற்ற எவரும் அரசியலில் உயர முடியும்” என்று கூறினார்

2025 பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளராக கூட்டணிக் கட்சி தலைவரான தேஜஸ்வியை நிதிஷ் குமார் அறிவித்ததாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், 2025 தேர்தலில் தேஜஸ்வி யாதவ் மகாகத்பந்தனின் முதல்வராக இருப்பார் என்று முதல்வர் நிதிஷ்குமார் ஒருபோதும் கூறவில்லை என்று ஜேடியு தலைவர் லாலன் சிங் கூறினார். ஆனால் ஆர்ஜேடியின் எம்எல்ஏ விஜய் குமார் மண்டல், தேஜஸ்விக்கு முதல்வர் நாற்காலியை நிதிஷ் குமார் ஒப்படைப்பார் என்று கூறினார்.

இது தொடர்பாகப் பேசிய தேஜஸ்வி யாதவ், தான் முதலமைச்சராகும் அவசரத்தில் இல்லை என்றும், 2024 பொதுத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதே மகா கூட்டணியின் நோக்கம் என்றும் கூறி வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in