அதானி குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்காதது ஏன்?: ஜி.ராமகிருஷ்ணன் ஆவேசம்

சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்அதானி குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்காதது ஏன்?: ஜி.ராமகிருஷ்ணன் ஆவேசம்

’லெட்டர் பேட் கம்பெனிகளை வைத்து மோசடி செய்துள்ள அதானி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை ஏன் வாயை திறக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இதன் பின் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’மத்திய அரசின் 2023 - 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சிக்கும் உதவாது, வறுமையையும் ஒழிக்காத பட்ஜெட். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களைப் பாதுகாக்கும் வகையில் பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெறவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி-ராமகிருஷ்ணன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி-ராமகிருஷ்ணன் பேசினார்.அதானி குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்காதது ஏன்?: ஜி.ராமகிருஷ்ணன் ஆவேசம்

பாஜக அரசு கார்பரேட்டுகளுக்கு சலுகை அளிக்கும் அரசு என்பது அதானி மூலம் அம்பலப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹின்டர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள 81 கேள்விகளுக்கு அதானி ஒரு கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க இயலவில்லை.

லெட்டர் பேட் கம்பெனிகளை வைத்து மோசடி செய்துள்ள அதானிக்கு எதிராக பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் அமலாக்க துறை ஏன் வாயைத் திறக்கவில்லை? கார்பரேட்டுகளுக்கு செல்வ வரி மற்றும் வாரிசு வரியை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in