’சீமான் மீது ஏன் நடவடிக்கை இல்லை’ - கொந்தளிக்கும் பிரஷாந்த் கிஷோர்!

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்’சீமான் மீது ஏன் நடவடிக்கை இல்லை’ - கொந்தளிக்கும் பிரஷாந்த் கிஷோர்!

'’ தமிழகத்தில் இந்தி பேசும் மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசும் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை’’ என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான் பேசியதை பகிர்ந்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோ பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஒரு சில வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பொய்யான வீடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 11 பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‘’வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவரும் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை ‘’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in