மோடியின் நண்பர் அதானி என்பதால் விவாதிக்க மறுக்கிறதா மத்திய அரசு? - மாணிக்கம் தாகூர் கேள்வி

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்மோடியின் நண்பர் அதானி என்பதால் விவாதிக்க மறுக்கிறதா மத்திய அரசு? - மாணிக்கம் தாகூர் கேள்வி

பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இடையேயான நட்பின் காரணமாகத்தான் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதானி குறித்து விவாதிக்க மறுக்கிறது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதானி விவகாரத்தால் மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திக்கவைக்கப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘’ நாடாளுமன்றத்தில் அதானி ஊழல் குறித்து விவாதிக்க வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினோம். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை 3-வது நாளாக ஒத்தி வைத்துள்ளனர்.

அதானி ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. குறிப்பாக மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு அச்சப்படுகிறது. இதனை விவாதிக்கக் கூடாது என இவர்கள் இவ்வளவு தீவிரமாக உள்ளனர் என்பது தெரியவில்லை. ஒருவேளை அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதாலா..? அதானியை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செயல்படுகிறது’’ என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in