ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- அமைச்சர் கே.என்.நேரு சொல்லும் காரணம் இதுதான்!

ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- அமைச்சர் கே.என்.நேரு சொல்லும் காரணம் இதுதான்!

தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்கள் தரப்பில் அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்ததாரர்கள் அவசரகதியில் வடிகால்வாய் பணிகளை முடிக்கும் வேலையில் இறங்கி வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் வடிகால்வாய் போடுவதற்காக மழைநீருக்குள்ளே கான்கிரீட் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. மேலும் பல இடங்களில் வடிகால்வாய்கள் பணி நடக்கும் இடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்காமல் அப்படியே தோண்டப்பட்டு விடுவதால் பொதுமக்கள் அந்த வடிகால்வாயில் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேருவிடம் வடிகால்வாய் தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களையும் மறைக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதிகாரிகள் நேரில் சென்றும் கண்காணிக்கிறார்கள். செய்யாதவர்களை மீண்டும் செய்ய சொல்லுவோம். அதிகாரிகளால் அறிவுரைகள் தான் கொடுக்க முடியும். இப்போது ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பணிகள் தேங்கி நின்றுவிடும். பின்னாளில் வேலை கொடுக்கும்போது இந்த பிரச்சினைகள் எல்லாம் கருத்தில் கொள்ளப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in