எச்.ராஜாவை ஆளுநராக்க முயல்வது ஏன்?: திருமாவளவன் சொல்லும் சீக்ரெட்

எச்.ராஜாவை ஆளுநராக்க முயல்வது ஏன்?: திருமாவளவன் சொல்லும் சீக்ரெட்

"மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு பாஜக முயல்கிறது. அந்த அடிப்படையில்தான் எச்.ராஜாவை கேரள ஆளுநராக நியமிக்க பாஜக முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அத்துடன் வன்முறையைத் தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டக்கூடிய வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

ஆனால், தமிழக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என பாஜகவினர் திட்டமிடுகின்றனர். அதற்காக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை ஆளுநராக நியமித்து வருகின்றனர்.

அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றனர். அந்த அடிப்படையில்தான் எச்.ராஜாவை கேரள ஆளுநராக நியமிக்க பாஜக முயல்வதாக கூறப்படுகிறது. இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.