மத்திய அரசு எல்லோருடனும் சண்டையிட்டால் நாடு எப்படி முன்னேறும்? - அர்விந்த் கேஜ்ரிவால் சீற்றம்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்மத்திய அரசு எல்லோருடனும் சண்டையிட்டால் நாடு எப்படி முன்னேறும்?

மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் மத்திய பாஜக அரசு சண்டையிட்டு வருவதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு முக்கிய புள்ளியாக மாறி வருகிறது என்ற செய்தியை மேற்கோள் காட்டி, மற்றவர்களின் வேலைகளில் தலையிட வேண்டாம் என்று நரேந்திர மோடி அரசை அர்விந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். அவர், "மத்திய அரசு ஏன் எல்லோருடனும் சண்டை போடுகிறது? நீதிபதிகள், உச்சநீதிமன்றம், மாநில அரசுகள், விவசாயிகள், வியாபாரிகள் என எல்லோரிடமும் சண்டை போட்டால் நாடு முன்னேறாது. உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள், மற்றவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும். பிறர் வேலையில் நீங்கள் தலையிடாதீர்கள்" என இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுனருடன் பலவிதமான ஆட்சி மற்றும் அதிகார வரம்பு தொடர்பான விஷயங்களில் சண்டையில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம், கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு அணிவகுத்துச் சென்றார். பள்ளி ஆசிரியர்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பும் தனது அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக இந்த பேரணியை நடத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in