பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது ஏன்?- சசிகலா அளித்த ஒற்றை பதில்

பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது ஏன்?- சசிகலா அளித்த ஒற்றை பதில்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சரியே என்ற சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம், என சசிகலா தெரிவித்தார்.

கொங்குமண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று அவர் நாமக்கல் ஆஞ்சநேயர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சசிகலா இன்று வழிபாடு நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவும் நீக்கவோ முடியும். இது எம்ஜிஆர் வகுத்துத் தந்த திட்டம். அதிமுக யாராலும் அசைக்க முடியாத கோட்டை. தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். விரைவில் இன்று வந்திருக்க தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்.

பாஜக வளர நினைப்பதில் தவறில்லை. ஒரு புதுக் கட்சி தொடங்கினால் அவர்கள் வளர தான் நினைப்பார்கள்" என்றார்.

பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவதுபோல் உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இது கால சூழ்நிலை என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in