அதிமுகவில் இருந்து வெளியேறியது ஏன்?- முதன் முறையாக மனம் திறந்த நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

அதிமுகவில் இருந்து ஏன் பாஜகவுக்கு வந்தேன் என முதன் முறையாக நயினார் நாகேந்திரன் மனம் திறந்து கூறியுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவில் ஜெயலலிதாவோடு மிக நெருக்கமான இடத்தில் இருந்தவன் நான். அவர் மறைவுக்குப் பின்பு அங்கிருப்பவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பதால்தான் வெளியே வந்தேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அற்புதமான இயக்கம் அது. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும், பாஜக விருப்பமும்!

பாஜகவைப் பொறுத்தவரை இன்னொரு கட்சியின் விவகாரத்தில் தலையிட முடியாது. இருந்தும், இப்போதைய குழப்பமான சூழலைப் பார்த்து எங்கள் அகில இந்திய தலைமை முடிவுசெய்யும். இதற்குமுன்பும் அக்கட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதனால் ஒன்றாகச் சேரமாட்டார்கள் என்று நாம் உறுதியாகச் சொல்லமுடியாது. அதிமுகவைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. அது நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பாஜக அதிமுக விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக யாருக்கும் ஆதரவு தரவில்லை. நடுநிலைதான் பேணுகிறது. பொன்னையன் ஆடியோவில் உள்ள குரல் என் குரல் அல்ல எனச் சொல்லியிருக்கும்போது அந்த கேள்விக்குப் பதில் சொல்வது சரியாக இருக்காது.

அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் அளவுக்கு திமுக போயிருக்கக் கூடாது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை வராத அளவிற்கு முன்னரே தடுத்திருக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையை தமிழக அரசு குறைக்கவேண்டும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in