இந்துக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக் கூற மறுப்பது ஏன்?: ஆளுநர் தமிழிசை கேள்வி

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசைஇந்துக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக் கூற மறுப்பது ஏன்?: ஆளுநர் தமிழிசை கேள்வி

சாதி, மதத்தால் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிடமாடல் புரியாது எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், எப்படி பிரித்துப் பார்ப்பதனால் இந்துக்களுக்கு மட்டும் வாழ்த்துக் கூற மறுக்கிறார் என்பதை ஒரு இந்துவாக அறிய விரும்புகிறேன் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘’ இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அண்ணன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சாதி, மதத்தால் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் அவருக்கு எனது சிறிய கேள்வி, எப்படி பிரித்துப் பார்ப்பதால் எதை வைத்து பிரித்துப் பார்ப்பதால் தீபாவளிக்கோ, விநாயகர் சதுர்த்திக்கோ வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?

பாரத பிரதமர், ஆளுநர்கள் உள்ளிட்ட அனைவருமே எல்லா விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறோம். எந்தவிதத்திலும் பிரித்துப் பார்ப்பதில்லை. எப்படி பிரித்து பார்ப்பதால் வாழ்த்து சொல்ல மறுக்கிறார் என்பதற்கு பதில் கூறினால் நன்றாக இருக்கும். ஈராண்டு சாதனையாக அனைத்து அமைச்சர்களும் விளம்பரம் அளித்துள்ளார்கள்.

அமைச்சர்களின் துறைகளுக்கு தேவையான நிதி இருக்கிறதோ, இல்லையோ தவறாமல் உதயநிதி இருக்கிறார். இரண்டு ஆண்டு சாதனையாக வாரிசு உருவாகி இருக்கிறார். அறிவிப்புகளை வெளியிட்டு திரும்பப் பெறும் ஆட்சியாகவும் இது இருந்து கொண்டிருக்கிறது அதனால் மக்கள் அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

பிரித்து பார்க்கவில்லை என்றாலும் வேங்கை வயல் போன்ற நிகழ்வுகள் பூதாகரமாகியுள்ளது. திருமாவளவன், ரவிக்குமார் போன்றவர்கள் புதுச்சேரியின் அமைதியைக் குலைக்கப் போராட்டம் நடத்துகிறார்கள். விழுப்புரத்தில் முறையான மருந்துவ வசதி உள்ளதா என்பது கூட தெரியாமல் விழுப்புரம் எம்.பி உள்ளார்.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை நான் பார்க்கலாம் என்று இருக்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் நிச்சயம் போராடமாட்டார்கள். அதைத்தான் பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார். இந்தவிவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் நானும் பார்க்க உள்ளேன் ’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in