முத்தலாக்கை ஏன் குற்றமாக்க வேண்டும்? - கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி

பினராயி விஜயன்
பினராயி விஜயன்முத்தலாக்கை ஏன் குற்றமாக்க வேண்டும்?

கேரள முதல்வர் பினராயி விஜயன், முத்தலாக் சட்டம் தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். எல்லா மதங்களிலும் விவாகரத்துகள் நடக்கும் போது முஸ்லிம்களிடையே உடனடி விவாகரத்து நடைமுறை ஏன் குற்றமாக்கப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

காசர்கோட்டில் ஆளும் சிபிஎம்-ன் அணிவகுப்பான 'ஜனகிய பிரதிரோதா ஜாதா'வைத் தொடங்கிவைத்துப் பேசிய கேரள முதல்வர், "எல்லா மதங்களிலும் விவாகரத்துகள் நடந்தாலும், முத்தலாக் குற்றமாக்கப்பட்டது. அது ஏன் முஸ்லிம்களுக்கு மட்டும் கிரிமினல் குற்றமாகும்?. மற்ற அனைத்து விவாகரத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் சிவில் வழக்காக பார்க்கப்படுகின்றன. ஆனால், ஒரு முஸ்லிம் தம்பதியினருக்கு இடையேயான விவாகரத்து வழக்கு, மனைவிக்கு முத்தலாக் சொன்னதற்காக அந்த நபரை சிறைக்கு அனுப்பலாம்" என்று கூறினார்.

மேலும், "குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமையை முடிவு செய்ய மத்திய அரசு மதத்தைப் பயன்படுத்தியது. அதில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம், எந்த விலையிலும் அதை இங்கு செயல்படுத்த மாட்டோம்" என்று அறிவித்தார்.

திருமண விவாகரத்து விஷயங்களில் ஒரு நாடு தனித்தனியான தண்டனை தரங்களை வைத்திருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர், "இந்த மாநாட்டுக்கு வெவ்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தண்டனை முறையைப் பயன்படுத்தலாமா?. ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவருக்கு ஒரு சட்டம், மற்றொருவருக்கு மற்றொரு சட்டம் என்று சொல்ல முடியுமா? " என கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in