ரோஜாவின் ஒரிஜினல் நிர்வாண படத்தை வெளியிடுவோம்- தெலுங்கு தேசம் கட்சி எச்சரிக்கை

வாங்கலபுடி அனிதா தெலுங்கு தேசம் கட்சி
வாங்கலபுடி அனிதா தெலுங்கு தேசம் கட்சி

``ஆந்திர அமைச்சர் ரோஜாவின் நிர்வாணப் படத்தை முழுமையாக வெளியிடுவோம்'' என தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவர் அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சாலை பணிகளில் ஊழல் நடந்ததாக அவரது மகன் நர லோகேஷ் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில  அமைச்சர் ரோஜா
ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைதை, ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள ரோஜா வரவேற்றதோடு, அதனை கொண்டாடினார். இந்நிலையில், அவர் நிர்வாணப்படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. பண்டாரு சத்தியநாராயணன் பேசினார். மேலும், சட்டசபையிலும் சிடிக்களை காட்டினார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா கண்ணீருடன் நியாயம் கேட்டார். இதையடுத்து, பண்டாரு சத்தியநாராயணா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி மகளிர் அணித் தலைவர் வாங்கலபுடி அனிதா அமைச்சர் ரோஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், அமைச்சர் ரோஜா தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராமணி ஆகியோரை தரக்குறைவாக பேசியுள்ளார். அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் ரோஜா பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்றார்.

மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருப்பவர்களே கூட ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக ஒருநாள் அழுவதாக கூறிய அனிதா, இப்போது ரோஜா நடித்த படத்தின் டிரெய்லர் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. இனி ஒரிஜினல் படத்தை வெளியிடுவோம் என அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாங்கலபுடி அனிதா தெலுங்கு தேசம் கட்சி
மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!
வாங்கலபுடி அனிதா தெலுங்கு தேசம் கட்சி
HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!
வாங்கலபுடி அனிதா தெலுங்கு தேசம் கட்சி
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
வாங்கலபுடி அனிதா தெலுங்கு தேசம் கட்சி
அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!
வாங்கலபுடி அனிதா தெலுங்கு தேசம் கட்சி
பரபரப்பு… டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in