உ.பி, பஞ்சாப், உத்தராகண்ட், கோவாவில் ஆட்சியமைக்கப்போவது யார்?

கருத்துக் கணிப்புகள் வெளியீடு
உ.பி, பஞ்சாப், உத்தராகண்ட், கோவாவில் ஆட்சியமைக்கப்போவது யார்?

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலில் யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்பது குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 262 முதல் 277 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று ரிபப்ளிக் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி 119 முதல் 134 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 7 முதல் 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 முதல் 7 தொகுதிகளிலும், மற்றவை 2 முதல் 6 தொகுதிகளை கைப்பற்றியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் காங்கிரஸ் 33 முதல் 38 தொகுதிகளிலும், பாஜக 29 முதல் 34 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 1 முதல் 3 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 முதல் 3 தொகுதிகளிலும் ரிபப்ளிக் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 முதல் 31 தொகுதிகளிலும், பாஜக 1 முதல் 4 தொகுதிகளிலும், அகாலிதளம் 7 முதல் 11 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 56 முதல் 61 தொகுதிகளிலும், காங்கிரஸ் 24 முதல் 29 தொகுதிகளிலும், அகாலிதளம் 22 முதல் 26 தொகுதிகளிலும், பாஜக 1 முதல் 6 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

கோவாவில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் 33 முதல் 35 தொகுதிகளிலும், பாஜக 31 முதல் 33 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

உபியில் பாஜக 211 முதல் 255 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 146 முதல் 160 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 14 முதல் 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 முதல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in