நோட்டா வாக்குகளால் குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் யாருக்கு லாபம்?

நோட்டா  வாக்குகளால் குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் யாருக்கு லாபம்?

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பாஜக வீழ்ச்சிக்குக் காரணமான நோட்டா வாக்குகள் குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்குச் சாதகமாக மாறப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

குஜராத், இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அதே போல உத்தரப்பிரதேசம், பிஹார் உள்பட 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் டெல்லி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 15 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த உள்ளாட்சி அமைப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. டெல்லியில் உள்ள 250 வார்டுகளில், ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 104 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. காங்கிரஸ் 9 இடங்களிலும், மற்றவைகள் 3 இடங்களிலும் வென்றன. இதன் மூலம் ஆம் ஆத்மி டெல்லி உள்ளாட்சி அமைப்பைக் கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் நோட்டாவின் பங்கு அளப்பரியது.

டெல்லியில் மூன்று உள்ளாட்சிகளை ஒன்றிணைத்த பின் நடத்தப்பட்ட முதல் தேர்தல் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. டிச. 4.ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு கோடியே 45 லட்சத்து 5 ஆயிரத்து 358 பேருக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால், 50.48 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பெரும்பாலான வாக்குகளை நோட்டோ பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வாக்குகள் தான், ஆம் ஆத்மி கட்சிக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நோட்டாவின் பங்களிப்பு அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே தான் இதுவரை போட்டி நிலவி வந்தது. ஆனால், தற்போது ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளதால் நோட்டா வாக்குகளைச் சிதறடிக்க வாய்ப்பு உள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி போட்டியிடும் நிலையில்,அக்கட்சிக்கு லாபம் தான் என்றாலும், நோட்டாவின் பக்கமும் அந்த வாக்காளர்கள் சாய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாக்குகள் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இன்று முழுமையான வாக்கு எண்ணிக்கை முடிவு வந்த பின் நோட்டாவினால் யார் பலனடைந்தார்கள் என்று தெரிந்து விடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in