கோவா, மணிப்பூர், உத்தராகண்ட்: பாஜக முதல்வர்கள் யார்?

கோவா, மணிப்பூர், உத்தராகண்ட்: பாஜக முதல்வர்கள் யார்?

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில், காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப் ஆம் ஆத்மி வசம் சென்றுவிட்ட நிலையில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை, யோகி ஆதித்யநாத் தான் அடுத்த முதல்வர் என்பது தேர்தலுக்கு முன்பாகவே தீர்மானிக்கப்பட்ட விஷயம். எனினும், பிற மாநிலங்களில் யார் முதல்வர் என்பது இன்னும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை.

உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 47-ல் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக. எனினும், முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட கடிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுவிட்டதால் அவருக்குப் பதிலாக வேறொருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் எனப் பேசப்படுகிறது. சத்பால் மஹராஜ், தான் சிங் ராவத் போன்றோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

அதேபோல், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முறையே பிரமோத் சாவந்த மற்றும் என்.பீரேன் சிங் இருவரும் முதல்வராகத் தொடர்வார்களா இல்லையா எனும் விவாதமும் எழுந்தது. இதுதொடர்பாக, டெல்லியில் பாஜக தலைமை விவாதித்துவந்தது.

இந்த முறை மணிப்பூரில் முதல்வர் வேட்பாளர் என யாரும் முன்னிறுத்தப்படவில்லை. 2016 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த பீரேன் சிங், 2017-ல் பாஜக முதன்முறையாக அம்மாநிலத்தில் வெற்றிபெற்றதும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிஸ்வஜீத் சிங், கோந்தோஜவும் கோவிந்தாஸ் சிங் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. எனினும், பீரேன் சிங்கின் பெயரே இறுதிசெய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றனர்.

அதேபோல, பிரமோத் சாவந்த் கோவா முதல்வராக நீடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. உத்தராகண்டிலும் யார் முதல்வர் என விரைவில் தீர்மானிக்கப்படும்.

ஹோலி பண்டிகைக்குப் பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

Related Stories

No stories found.