அதிமுவிற்கு தேவை ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா?: பாஜக நயினார் நாகேந்திரன் சொன்ன பளிச் பதில்!

திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருநெல்வேலி பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் அதிமுகவின் தலைமைப் பதவிக்கு யார் வர வேண்டும் என பதில் கூறியுள்ளார்.

தென்மாவட்டங்களில் அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜகவில் திருநெல்வேலி எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பாஜக போராட்டத்தின்போது அதிமுகவின் ஆண்மை குறித்துப் பேச சர்ச்சையானது. அதன்பின்னரே, அதிமுக குறித்து பேசுவதையே தவிர்த்துவந்தார். இந்நிலையில் நெல்லையில் இன்று பாஜக சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார் நயினார் நாகேந்திரன். தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில் , “எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட கட்சி அதிமுக. அது மிகவும் பெரிய கட்சி. அதில் இரண்டு தலைவர்களில் யார் நல்லவரோ, அவர் அந்தப் பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் வரவேண்டும். அதிமுகவின் விதி 20 பியின் படி, பேரூராட்சி செயலாளர் உள்பட அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியின் விதி. சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடம் இல்லாவிட்டால் பொதுக்குழு கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றலாம். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்பது சரியான முடிவுதான் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in