திமுக கூட்டணியில் சேரமாட்டோம் என யார் சொன்னது என்றும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அதிரடியாக கூறினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இடம் பெற்றிருந்தார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஜான் பாண்டியன் கலந்து கொண்டார். அதே நேரத்தில் அதிமுகவுடன் ஒன்று சேர்ந்து அவர் பயணித்தார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக திடீரென விலகியது. இதையடுத்து, அதிமுகவை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிலும் இல்லை. அதிமுக கூட்டணியிலும் இல்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். பாஜகவும், அதிமுகவும் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சி என்று கூறிய ஜான் பாண்டியன், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் நாங்கள் திமுக கூட்டணியில் சேரமாட்டோம் என யார் சொன்னது என்றும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்றும் கூறி அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!