ராமஜெயத்தை கொலை செய்தது நீங்களா?- உண்மை கண்டறியும் சோதனையில் அடுக்கடுக்கான 12 கேள்விகள்

ராமஜெயத்தை கொலை செய்தது நீங்களா?- உண்மை கண்டறியும் சோதனையில் அடுக்கடுக்கான 12  கேள்விகள்

உண்மை கண்டறியும் சோதனையில் ராமஜெயத்தை கொலை செய்தது நீங்களா? என்று காவல்துறையினர் அடுக்கடுக்கான 12 கேள்விகள் எழுப்பினர். அதே நேரத்தில் உண்மை கண்டறியும் சோதனை ஒரு கண்துடைப்பு வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகப்படும் 13 நபர்களில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்காக தடய அறிவியல் நிபுணர்கள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டனர். இன்று டிஜிபி அலுவலகம் அருகே அமைந்துள்ள தடய அறிவியல் அலுவலகத்தில் முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. கூலிப்படை தலைவன் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் உள்ளிட்ட நான்கு பேர் அவர்களது வழக்கறிஞருடன் வந்தனர்.

சோதனை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, "இந்த சோதனைக்காக ஆஜரான ஒவ்வொருவரிடமும் மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 6 கேள்விகள் மட்டுமே கொலை வழக்கு தொடர்புடையது. அதில், உங்கள் பெயர் என்ன?, ராமஜெயத்தை கொலை செய்தது நீங்களா?, உங்களுக்கு பேட்மிண்டன் விளையாடும் பழக்கம் உள்ளதா?, ராமஜெயம் கொலை நாளன்று திருச்சி ரயில் நிலையம் அருகே சென்றீர்களா?, நடப்பது என்ன ஆண்டு?, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளன்று நீங்கள் பயன்படுத்திய சிம்கார்டின் நம்பர் என்ன?, இந்த ஆண்டு ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளீர்களா?, இதற்கு முன்பாக பொய் சாட்சிக்காக ஆஜராகி உள்ளீர்களா?, ராமஜெயத்தை கொலை செய்தது யார்?, ராமஜெயத்தின் மோதிரத்தை நீங்கள் எடுத்தீர்களா?, ராமஜெயத்தை தாக்கினீர்களா? என மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டு அதை வீடியோ பதிவு செய்தனர். 12 கேள்விகளை ஒரு நபரிடம் 6 முறை கேட்கப்பட்டது. 20 நொடிகள் கழித்து மாற்றி மாற்றி கேள்விகளை கேட்டனர். ஆம் இல்லை என்று மட்டும் பதிலளித்தால் போதுமானது என கூறினர்.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

இந்தக் கேள்வி கேட்கப்படும் போது பதில் சொல்பவரின் இதயத்துடிப்பு ஆகியவற்றை கிராஃப்ட் பேப்பரில் குறித்து வைத்து கொள்ளப்படும் என்றும் மனிதனுக்கு ஈசிஜி சோதனை எடுக்கப்படும் போது, எவ்வாறு அது கிராப் பேப்பரில் அலைகள் போன்று மேலும் கீழுமாக செல்வது போல செல்லும் அதனை வைத்து அவர்கள் உண்மையை சொல்கிறார்களா அல்லது பொய் சொல்கிறார்களா என முடிவு செய்து கொள்வார்கள். அதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனையின் முடிவு அறிக்கை தயாரிக்கப்படும். உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கையின் முடிவு இந்த வழக்கில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இது ஒரு கண் துடைப்பு முயற்சி.

கொலை வழக்குகளில் ஆதாரங்கள், சாட்சியங்கள் தான் மிக முக்கியமானவை உண்மை கண்டறியும் சோதனை மூலம் அவர் உண்மை சொல்லி இருக்கிறாரா? அல்லது பொய் சொல்லி இருக்கிறாரா? என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இதனால் எந்த பயனும் இல்லை. இந்த வழக்கில் நரை முடி கணேஷ் என்பவருடைய செல்போன் எண் கொலை நடந்த சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டவரில் பதிவானதாகவும், அதன் மூலமாக மோகன் ராம், தினேஷ், சத்யா உள்ளிட்டவர்களும் தொடர்பில் வருவதாகவும், அதன் அடிப்படையில் இவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் இந்த சோதனை நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால் டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர் மோசஸ் என்பவர் வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் கேள்வியில் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உண்மை கண்டறியும் சோதனையில் செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய நான்கு பேர் இந்த சோதனைக்காக ஆஜராக உள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in