`வஞ்சகன் யார்; தூயவன் யார்?'- பொதுக்குழுவில் வளர்மதி அதிரடி!

`வஞ்சகன் யார்; தூயவன் யார்?'- பொதுக்குழுவில் வளர்மதி அதிரடி!

வஞ்சகன் யார், தூயவன் யார்? என்பது குறித்து அதிமுக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி அதிரடியாகப் பேசினார்.

சென்னை வானகரத்தில் நடந்து வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மாவை வணங்குகிறேன். இன்னும் சற்று நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எங்கள் பாசமிகு அண்ணன் எடப்பாடி அவர்களே... பொதுக்குழு உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

வள்ளலார் ராமலிங்க அடிகள் ஒரு அழகான வார்த்தையை சொல்லியிருக்கிறார். தூய உள்ளம் படைத்தவர்களுக்குத்தான் இறைவன் அருள்வான். வஞ்சகனை இறைவன் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பான். அது கண்டிப்பாக நடக்கும், நடந்தேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

வேட்டைக்காரன் படத்திலேயே, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாடுவார். ‘மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்று. அந்த மாலைகள் எல்லாம் இப்போது உச்சத்தில் இருக்கிற அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி மீது விழும். இங்கே சில பேர் இருக்கிறார்கள். அவர்களை விமர்சித்து பெரியாளாக்க விரும்பவில்லை. அன்பு அண்ணன் எடப்பாடியார் பொதுச் செயலாளராக அமரக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கழக தொண்டர்களை அவர் நிச்சயம் காப்பாற்றுவார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு இந்த இயக்கத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரு உன்னத தலைவர் எடப்பாடியார் வந்துவிட்டார். ஒரு உன்னத தலைவன் பிறந்துவிட்டார். இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கு அண்ணன் எடப்பாடியார் இருக்கிறார். அஞ்சாதே என்று சொல்லி விடைபெறுகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in