கள்ளச்சாராயத்தால் 42 பேர் பலி; குஜராத்தில் போதைப்பொருள் மாஃபியாக்களை பாதுகாப்பது யார்? - ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி
ராகுல் காந்திகோப்புப் படம்

மது விலக்கு அமலில் உள்ள குஜராத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆளும் சக்திகள் எது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

குஜராத்தின் போடாட் மற்றும் அஹமதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த 42 பேர் ஜூலை 25 அன்று போலி மதுவை உட்கொண்டதால் இதுவரை இறந்துள்ளனர், அதே நேரத்தில் இன்னும் 97 பேர் பாவ்நகர், போடாட் மற்றும் அஹமதாபாத் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

குஜராத் கள்ளச்சாராய சோகம் பற்றியும், மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் குறித்தும் கவலை தெரிவித்து ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி," மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான குஜராத்தில், சட்டவிரோத மது அருந்தியதால் பல குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் இருந்து பல பில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்களும் தொடர்ந்து மீட்கப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில், கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்து ரூ.376 கோடி மதிப்பிலான 75 கிலோ ஹெராயினை குஜராத் தீவிரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) கைப்பற்றியது. மே மாதம் இதே துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் நிலத்தில், கண்மூடித்தனமாக போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்த மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆளும் சக்தி எது” அவர் கேள்வியெழுப்பியுள்ளார்

இந்த வழக்கில் மெத்தனால் ரசாயனத்தை வாங்கியவர் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்தவர்கள் உட்பட 15 முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது விலக்கு அமலில் உள்ள மாநிலமான குஜராத்தில் மது உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத் சட்டத்தின்படி, அனுமதியின்றி மதுபானம் வாங்குதல், அருந்துதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ஒருவரைக் கைது செய்யலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in