குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியமைக்கப்போவது யார்?- வெளியானது கருத்துக்கணிப்பு

குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியமைக்கப்போவது யார்?- வெளியானது கருத்துக்கணிப்பு

குஜராத், இமாச்சல பிரதேச ஆகிய மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 56.88% வாக்குகள் பதிவாகின. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 14 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் மாலை 5 மணி வரை தோராயமாக 58.68% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்றைய தேர்தலில் 833 வேட்பாளர்கள் களம் கண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் வாக்களித்தனர்.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தலில் 65.92 சதவிதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்டவை போட்டியிட்டாலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நம்பிக்கையில் காங்கிரஸும் உள்ளன.

இந்த நிலையில், குஜராத், இமாச்சல பிரதேசத்தில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று என்பது குறித்த கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது. குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.

குஜராத்

குஜராத்தில் பாஜக 117 முதல் 140 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி இடங்களை கைப்பற்றும் என்றும் சிஎன்என் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.

என்டிடிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 128 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும், ஆம் ஆத்மி 7 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ், டிவி9, என்டிடிவி, டைம்ஸ் நவ், ஜீ ஆகியவை பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கணித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 128 இடங்களில் பாஜகவும், 44 இடங்களில் காங்கிரஸும், 7 இடங்களில் ஆம் ஆத்மியும் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ்18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 117 முதல் 140 இடங்களையும், காங்கிரஸ் 34 முதல் 51 இடங்களையும், ஆம் ஆத்மி 6 முதல் 13 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

ரிபப்ளிக் சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 34 முதல் 30 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 28 முதல் 33 இடங்களை கைப்பற்றும் என்றும் ஆம் ஆத்மி ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 32 முதல் 40 இடங்களிலும், காங்கிரஸ் 27 முதல் 34 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

பாஜக வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ், ஜீ நியூஸ் ஆகியவை கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in