முக்குலத்தோர், வன்னியருக்கு சம அளவில் ஒதுக்கிய திமுக!

முக்குலத்தோர், வன்னியருக்கு சம அளவில் ஒதுக்கிய திமுக!

திமுக மாவட்ட செயலாளர் பதவிகள்  முக்குலத்தோர் மற்றும் வன்னியர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தலா 12 என்ற அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.  கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்திற்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

திமுக உட்கட்சி தேர்தல் முடிவடைந்து மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகள் யார் யாருக்கு  என்பது கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்டச் செயலாளர்களின்  எந்தெந்த ஜாதிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி எந்தந்த ஜாதிகளைச் சேர்ந்த யார் யார் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள் என்ற விவரம் பின்வருமாறு., 

திமுக மாவட்ட செயலாளர்களில்  நாடார்கள் மொத்தம் 6 பேர் உள்ளனர். கன்னியாகுமரி கிழக்கு -  அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மேற்கு -  நாகர்கோவில் மேயர் மகேஷ், தூத்துக்குடி வடக்கு - அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி தெற்கு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தென்காசி  தெற்கு - சிவபத்மநாபன், சென்னை வடக்கு - இளைய அருணா ஆகியோர் மாவட்டச் செயலாளராக உள்ளனர். ஒக்கலிக கௌடா ஜாதியைச் சேர்ந்த மூன்று பேர் மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தேனி- கம்பம் ராமகிருஷ்ணன், கிருஷ்ணகிரி - ஓசூர் பிரகாஷ், கோயம்புத்தூர் வடக்கு -  ரவி ஆகியோர் ஒக்கலிக கௌடா ஜாதியினர்.

யாதவர் சமூகத்தில்  பெரிய கருப்பனுக்கு மட்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது அவர் சிவகங்கை மாவட்டச்  செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரெட்டியார் சமூகத்திலும் ஒருவருக்குத்தான் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது.  விருதுநகர் தெற்கு மாவட்டத்திற்கு  அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

முக்குலத்தோர் சமூகத்தில் மொத்தம் 12 பேர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் - முத்துராமலிங்கம், நெல்லை கிழக்கு - ஆவுடையப்பன், விருதுநகர் வடக்கு -  தங்கம் தென்னரசு,  தேனி வடக்கு - தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் -  ஐ.பி.செந்தில்குமார், மதுரை தெற்கு - சேடப்பட்டி மணிமாறன், மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி, திருச்சி தெற்கு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, புதுக்கோட்டை வடக்கு -  செல்லப்பாண்டியன், திருவாரூர் -  பூண்டி கலைச்செல்வன், தஞ்சாவூர் வடக்கு - எஸ் கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் மத்தி - துரை.சந்திரசேகர் ஆகியோர் தற்போது மாவட்ட செயலாளராக உள்ளனர்.

நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் - கோ.தளபதி, திருவண்ணாமலை வடக்கு - எ.வ.வேலு, கோவை மாநகர் - கார்த்திக், சென்னை கிழக்கு - சேகர்பாபு, வேலூர் கிழக்கு -  ராணிப்பேட்டை காந்தி, வேலூர் மத்தி -  நந்தகுமார் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. 

முதலியார் சமூகத்தில் மூன்று பேருக்கு மா. செ பதவி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு - சிற்றரசு, காஞ்சிபுரம் வடக்கு - தாமோ.அன்பரசன், திருவள்ளூர் கிழக்கு - டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் மாவட்ட செயலாளராக உள்ளனர். 

முக்குலத்தோர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது போலவே வன்னியர் சமூகத்திற்கும் 12 மாவட்ட செயலாளர்கள் பதவியிடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை வட கிழக்கு - சுதர்சனம், திருவள்ளூர் மேற்கு - சந்திரன், காஞ்சிபுரம் தெற்கு - சுந்தர், விழுப்புரம் மத்தி - புகழேந்தி, கடலூர் கிழக்கு - அமைச்சர்  பன்னீர்செல்வம், வேலூர் மேற்கு -  தேவராஜ், அரியலூர் - சிவசங்கர்,  நாகப்பட்டினம் வடக்கு  - நிவேதா முருகன், திருவண்ணாமலை வடக்கு - தரணிவேந்தன், தருமபுரி கிழக்கு.- சுப்பிரமணியம், சேலம் மத்தி -  ராஜேந்திரன், சேலம் மேற்கு - செல்வகணபதி ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

முக்குலத்தோர் மற்றும்  வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அளவிற்கு கொங்கு வேளாளர் கவுண்டர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அச்சமுகத்தை  சேர்ந்த 11 பேர் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மேற்கு - அமைச்சர் சக்கரபாணி, கரூர் - செந்தில்பாலாஜி, தருமபுரி மேற்கு - பழனியப்பன், கோயம்புத்தூர் தெற்கு - தளபதி முருகேசன், ஈரோடு தெற்கு -முத்துசாமி, ஈரோடு வடக்கு - நல்லசிவம், நாமக்கல் மேற்கு -மதுரா செந்தில், நாமக்கல் கிழக்கு -ராஜேஷ்குமார், திருப்பூர் தெற்கு - பத்மநாபன், திருப்பூர் வடக்கு -செல்வராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு - மதியழகன் ஆகியோர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள்.

இஸ்லாமியர்கள் நான்கு பேர்  மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். நெல்லை மத்திய மாவட்டம் -அப்துல் வகாப்,  திருவள்ளூர் மத்தி - ஆவடி நாசர், விழுப்புரம் வடக்கு -செஞ்சி மஸ்தான், நீலகிரி -முபாரக் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்  பெரம்பலூர் - குன்னம்.ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி தெற்கு - வசந்தம் கார்த்திகேயன், சேலம் கிழக்கு -  சிவலிங்கம் ஆகியோர் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.  

பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் (வேளாளர்) கள்ளக்குறிச்சி  வடக்கு - உதயசூரியன், திருச்சி மத்திய மாவட்டம் - வைரமணி, தஞ்சாவூர் தெற்கு - கா.அண்ணாதுரை ஆகியோர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர கிராமணி சமூகத்தைச் சேர்ந்த மயிலை வேலு சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும், மீனவர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னை தெற்கு மாவட்டத்துக்கும், கௌதமன் நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்திற்கும் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கும்,  முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த தியாகராஜன் திருச்சி வடக்கு மாவட்டத்துக்கும், ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த அமைச்சர் கணேசன் கடலூர் மேற்கு மாவட்டத்திற்கும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த தனுஷ் குமார் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கும் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in