'கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை அல்ல, முதல்வரின் கோட்டை' - அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை அல்ல, முதல்வரின் கோட்டை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் பணிகள் விரைவில் நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீட்டுப் பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50 சதவீதம் காலியாக உள்ளது. அதனால் தான் தாமதம் ஆகிறது.

இதேபோல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் விடும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் மாதாந்திர மின்கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தாதது போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை அல்ல. முதல்வரின் கோட்டை!”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in