பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்ததும் வெளியிடுவேன்: பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்ததும் வெளியிடுவேன்: பழ.நெடுமாறன்

"பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன் அதனை ஊடகத்தினர் முன்பாக வெளியிடுவேன்" என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

கடந்த மாதம் 13-ம் தேதி உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நான் கூறியதற்கு யாரும் உடன்படவில்லை என்று சொல்வது மிகவும் தவறானது. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நான் கூறியது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன், அதனை ஊடகத்தினர் முன்பாக வெளியிடுவேன். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை கூறிய பின்னர் மக்கள் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in