ஐடி ரெய்டு என்ன புதுசா? - அமைச்சர் உதயநிதி கிண்டல்!

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதிஐடி ரெய்டு என்ன புதுசா? வருஷம் வருஷம் நடக்கிறது தான் - அமைச்சர் உதயநிதி கிண்டல்!

வருமான வரித்துறை சோதனை ஒவ்வொரு வருடமும் நடக்கிறது தான். இதுவரை நடந்த சோதனைகளில் யார் மீதாவது வழக்குப் போடப்பட்டுள்ளதா, கைது செய்துள்ளார்களா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த என்எஸ்எஸ் மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’என்எஸ்எஸ் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவை நிச்சயமாக நிறைவேற்றப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டுச் சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைத் திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவரை அழைப்பதற்காக முதல்வர் சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

எனக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாகக் கூறுவது உங்களுடைய ஆசை என நினைக்கிறேன். அதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. திமுக மீது எப்போது குற்றச்சாட்டுச் சொல்லாமல் இருந்துள்ளார்கள். நாங்கள் அதையெல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். எப்போதாவது எங்களை வாழ்த்தி இருக்கீங்களா?

அண்ணாமலை பேசியதாகப் பல ஆடியோக்கள் வெளி வந்துள்ளது. அதுகுறித்து யாராவது கேட்டீர்களா?. ஐடி ரெய்டு எப்போதும் நடக்கிறது தானே. இது என்ன புதுசா? வருஷம் வருஷம் நடக்கிறது. யார் மீதாவது குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்களா? யாரையாவது கைது செய்துள்ளார்களா? எப்ஐஆர் போட்டுள்ளார்களா? தண்டிக்கப்பட்டுள்ளார்களா? இல்லை. இதையெல்லாம் வைத்துக் கொண்டு திமுகவை யாரும் அச்சுறுத்த முடியாது.

நான் தமிழகத்தில் உள்ளதால் என்னைக் கேள்விக் கேட்கிறீர்கள். ஒருத்தர் கர்நாடகாவில் தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்துள்ளார். அவரை நீங்கள் யாரும் கேள்விக் கேட்கவில்லை’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in