குழந்தை திருமணம் செய்த கணவர்களை கைது செய்தால் மனைவிகளின் நிலை என்னவாகும்? - அசாம் அரசுக்கு ஓவைசி கேள்வி

ஓவைசி
ஓவைசிகுழந்தை திருமணம் செய்த கணவர்களை கைது செய்தால் மனைவிகளின் நிலை என்னவாகும்?

குழந்தை திருமணத்திற்கு எதிரான அசாம் அரசின் கடும் நடவடிக்கைகளை ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டித்துள்ளார். கணவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளை யார் கவனிப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கையில் கணவர்களை கைது செய்துவிட்டால் மனைவிகளை யார் கவனித்துக்கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இதுவரை 2,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8,000 குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தங்களது கணவர் மற்றும் மகன்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு வருமானம் இல்லை எனக்கூறி ஏராளமான பெண்கள் அசாமில் போராட்டம் நடத்தினர். கணவர் மற்றும் மகன்கள் கைது செய்யப்பட்டால் நாங்களும், எங்கள் குழந்தைகளும் எப்படி வாழ்வோம் என்று போராட்டம் நடத்திய பெண்கள் கேள்வி எழுப்பினர்.

அசாம் பாஜக அரசு குறித்துப் பேசிய ஒவைசி, ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசாங்கம் மேல் அசாமில் உள்ள மக்களுக்கு நிலங்களை வழங்கியதாகவும், கீழ் அசாமில் அதைச் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான அரசு ஏன் புதிய பள்ளிகளைத் திறக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய ஓவைசி, அசாம் அரசு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in