நடிகர் விஜய்யுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்ததின் பின்னணி என்ன?

நடிகர் விஜய்- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
நடிகர் விஜய்- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்றிரவு திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

தமிழகத்தில் ஏற்கெனவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான இடங்களை கைப்பற்றியது. இதன் எதிராெலியாக வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் களம் காண்கிறது.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு நேற்றிரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீரென வருகை தந்தார். விஜய்யுடன் ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இருந்ததாக முதல்வர் ரங்கசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரியில் பாஜக தயவுடன் முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார். முக்கிய அமைச்சர்கள் பதவியும் பாஜக வசமே இருக்கிறது. இதனால், தன்னால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் முதல்வர் ரங்கசாமி இருக்கிறார். இதனிடையே, அரசியலில் தனது இயக்க நிர்வாகிகளை களமிறங்கியுள்ள நடிகர் விஜய், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் போட்டியிடும் பட்சத்தில் விஜய்யின் ஆதரவை ரங்கசாமி கோரலாம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in