`ஆ.ராசா பேசியதில் என்ன தவறு இருக்கிறது?'- பாஜகவுக்கு தங்கத் தமிழ்செல்வன் கேள்வி

`ஆ.ராசா பேசியதில் என்ன தவறு இருக்கிறது?'- பாஜகவுக்கு தங்கத் தமிழ்செல்வன் கேள்வி

"திமுக எம்பி ஆ.ராசா பேசியதை முழுமையாக கேட்க வேண்டும். அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது" என்று தேனி வடக்கு திமுக பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா, "நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்.

இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்" என்றார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பாஜக உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது வரை இந்த விவகாரத்தில் திமுக மௌனம் காத்து வருகிறது. ஆ.ராசாவின் பேச்சு குறித்த கேள்விக்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் பதிலளிக்காமல் சென்றார். இந்நிலையில், ஆ.ராசாவுக்கு தேனி வடக்கு திமுக பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணன் ஆ.ராசா பேசியதை முழுமையாக கேட்க வேண்டும். அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. அவர் பேசியதை தவறு என்றே வைத்தாலும் அது அவரின் கருத்தல்ல, மனு ஸ்மிருதியில் இருக்கும் கருத்து. மனு ஸ்மிருதிக்கு எதிராக போராடாமல் அதை சுட்டிக் காட்டியதை தவறு என்றால் என்ன நியாயம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in