நீட் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்twitter page

ஆளுநர் நீட் தேர்வு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும் என்ற நிலை உள்ளது. நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்திவிட்டு வந்தார். ஆனாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருந்தது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீடு சதவீதத்தை 10% ஆக உயர்த்துவது முழுமையான பயனைத் தராது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு என்பதே மாணவர்களுக்கு முழு பயனை தரும். நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் ஜனாதிபதியை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in