இனி ஈபிஎஸ்சின் எதிர்காலம் எப்படி இருக்கும்?- வைத்திலிங்கம், புகழேந்தி சொல்வது இதுதான்!

இனி ஈபிஎஸ்சின் எதிர்காலம் எப்படி இருக்கும்?- வைத்திலிங்கம், புகழேந்தி சொல்வது இதுதான்!

முன்னாள் முதல்வர் ஈபிஎஸ்சை மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், புகழேந்தி.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது இந்த இயக்கத்திற்கு தொண்டர்களால், கட்சியின் உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த சட்ட விதி இன்று காப்பாற்றப்பட்டுள்ளது. அதேபோல் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் இப்போது காப்பாற்றப்பட்டிருக்கிறது. தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்று அறிவித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆரின் ஆத்மாவும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் மன்னிக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மற்றொரு ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், "நாடு போற்றும் நல்ல தீர்ப்பை இன்றைய தினம் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இந்த தீர்ப்பினை வரவேற்கிறோம். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லை என்று சொல்லி அந்த பதவியை அடைய துடிக்க நினைத்த சர்வாதிகார கும்பலுக்கு எதிர்ப்பாக கிடைத்த தீர்ப்பு இது. இந்த கட்சியை எடப்பாடி பழனிசாமி எந்த காலத்திலும் நடத்த முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது. தர்மம் வெற்றிருக்கிறது. அதர்மம் அழிந்திருக்கிறது. எடப்பாடியின் மோசமான அரசியல் கனவுகள் இனி பழிக்காது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in