பாமக-வில் அடுத்தது என்ன?

மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்க ஏற்பாடு
ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்து, ’அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை’ என அதிரடி காட்டியுள்ள பாமக, அடுத்த அரசியல் நகர்வு குறித்து விவாதிக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு நாள் குறித்துள்ளது.

இதன் பொருட்டு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், நாளை மறுநாள்(ஜன.25) கூடுகிறது. இது தொடர்பாக கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ’கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் பணியில் பாமக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியை விட்டு விலகிய நிலையில், திமுகவுடனான நெருக்கத்தை அதிகரித்து வரும் பாமகவின் அரசியல் திசை, இந்தக் கூட்டத்தின் நிறைவில் தெளிவாக வாய்ப்புண்டு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in