சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய அறிக்கையில் இருப்பது என்ன?

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய அறிக்கையில் இருப்பது என்ன?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டின் போது 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை சட்டப்பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், கடந்த 2018-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் உட்பட 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் போலீஸ்கார் சுடலைமுத்து 17 முறை துப்பாக்கியால் சுட்டு உள்ளதாகவும் ஒரே போலீஸ்காரை 4 இடங்களில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியதின் மூலம் அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை பூங்காவில் மறைந்து கொண்டு காவல்துறையினர் சுட்டதாகவும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் தன்னுடைய பொறுப்புகளை தட்டி கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்து உள்ளார் என்றும் எந்தவித யோசனையும் ஏற்காமல் ஊரிலே இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in