தமிழ்நாட்டில் திரையில் நடப்பதெல்லாம், நிஜத்தில் நடக்கிறது: சட்டம் ஒழுங்கு குறித்து ஓபிஎஸ் கடும் விமர்சனம்!

தாக்கப்பட்ட கார்.
தாக்கப்பட்ட கார்.தமிழ்நாட்டில் திரையில் நடப்பதெல்லாம், நிஜத்தில் நடக்கிறது: சட்டம் ஒழுங்கு குறித்து ஓபிஎஸ் கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று சட்டம் ஒழுங்கு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்  பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது தம்பி அசோக்குமாருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்தனர். அப்போது கரூரில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர் .இதையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளைத் திமுகவினர் தடுத்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், "வருமான வரித்துறை ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றார். மேலும், வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும்" என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது என்ற புகார் பரவியதையடுத்து, இன்று அமைச்சருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ.குமார்(63) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீடியோவை திமுகவினர் வெளியிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in