டிடிவி தினகரனுக்கு என்ன ஆயிற்று?: மருத்துவமனையில் திடீர் அனுமதி

டிடிவி தினகரனுக்கு என்ன ஆயிற்று?: மருத்துவமனையில் திடீர் அனுமதி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூரில் முகாமிட்டுள்ளார். இந்நிலையல் நேற்றிரவு திடீரென அவர் உணவு உட்கொண்டதில் ஒவ்வாமை ஏற்பட்டது. இதன் காரணமாக புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு உட்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அக்கட்சி தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in