வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் நடந்தது என்ன?- பீகார் முதல்வரை சந்தித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு விளக்கம்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்- டி.ஆர்.பாலு
பீகார் முதல்வர் நிதிஷ்குமார்- டி.ஆர்.பாலுவடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் நடந்தது என்ன?- பீகார் முதல்வரை சந்தித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு விளக்கம்

வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் வட மாநிலத்தைத் சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ போலியானது என்றும் இதுகுறித்து வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து பீகாரை சேர்ந்த அரசு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்தனர். அவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து விளக்கம் கேட்டனர்.

அப்போது, தாங்கள் தமிழகத்தில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் எந்தவிதமான அச்ச உணர்வும் இல்லை என்றும் கூறினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில அதிகாரிகள், தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினர். இந்த நிலையில் நாகர்கோவில் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று அங்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது, புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அவர் விளக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பீகாரைச் சேர்ந்த குழு தமிழகத்தில் ஆய்வு செய்து வரும் நிலையில் பாலு சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in