1989-ல் சட்டப்பேரவையில் நடந்தது என்ன?- அதிமுக எம்எல்ஏக்களுக்கு நினைவுப்படுத்திய சபாநாயகர் அப்பாவு!

1989-ல் சட்டப்பேரவையில் நடந்தது என்ன?- அதிமுக எம்எல்ஏக்களுக்கு நினைவுப்படுத்திய சபாநாயகர் அப்பாவு!

1989-ல் சட்டப்பேரவையில் அதிமுகவினர் எப்படி நடந்து கொண்டார்கள் என்று குறித்து சபாநாயகர் நினைவுப்படுத்தினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தை கையில் எடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "எதிர்க்கட்சிகளின் மாண்பை தொலைகின்ற வகையில் நீங்கள் செயல்படுகிறீர்கள். நீங்கள் வந்து மக்கள் பிரச்சினையை இந்த சட்டமன்றத்தில் நடத்தக் கூடாது என்று சொல்கிறீர்கள். இது முறையல்ல. நீங்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கலகம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்வது அவ்வளவும் கலகம். நீங்கள் யார் என்ன பேசினாலும் அவை குறிப்பில் இடம்பெறாது. நீங்கள் உள்ளே போராட்டம் பண்ணினால் அவைக் காவலர்களால் வெளியேற்றப்படுவீர்கள். தேவையில்லாமல் போராட்டம் பண்ணக்கூடாது.

நீங்கள் ஏற்கெனவே பிளான் செய்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் சபையை நடத்தவிடாமல் கலகம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு பண்ணுகிறீர்கள். தயவு செய்து வெளியே போய் விடுங்கள். நீங்கள் பயந்துவிட்டீர்கள். சட்டமன்றத்தில் பேசுவதற்கு ஏதோ உங்களுக்கு ஒரு கஷ்டம் இருக்கிறது. அவை நாகரிகத்தோடு நடந்து கொள்ளுங்கள். பிரச்சினை செய்யாதீர்கள். இந்தி எதிர்ப்பு அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்படுவதால் அவையை புறக்கணிக்கும் முடிவில் அமலில் ஈடுபடுகின்றனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்திற்கு பின் விளக்கம் அளிப்பேன். கேள்வி நேரம் முடிந்த பிறகு பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் பேச அனுமதிக்கப்படுவார்கள். 1988-89 மாதிரி நடக்கும் என்று நினைக்கிறீர்கள். அதை அனுமதிக்க மாட்டேன். ஜானகி அம்மாள் பதவிப்பிரமாணம் எடுத்தபோது எப்படி கலகம் செய்தீர்களோ அதேபோல் இப்போது செய்கிறீர்கள். அதேபோல 1989-ல் கலைஞர் பட்ஜெட் வாசிக்கும் போது அந்த உரையை பிடுங்கி எப்படி தகராறு பண்ணினீர்களோ, கலகம் பண்ணினீர்களோ, அதே எண்ணத்தோடு இப்போது வந்திருக்கிறீர்கள். நீங்கள் அப்படி இல்லையென்றால் கேள்வி நேரத்தில் உட்கார்ந்து கேள்வி பதில் முடிந்த பிறகு நான் நேரம் தருகிறேன். அந்த நேரத்தை நீங்கள் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் தயவு செய்து நீங்கள் வெளியே போடுங்கள். நீங்கள் சட்டப்பேரவையில் நடந்து கொள்ளும் விதத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது லைவ்வா போயிட்டு இருக்கு.

நீங்க பண்ணுகிற செயல்கள் எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் மக்கள் பிரச்சினையை பேச மறுக்கிறீர்கள். இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் வருவதை தெரிந்து கொண்டு நீங்கள் யாருக்கோ கட்டுப்பட்டு அந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என்று நோக்கத்தோடு செயல்படுகிறீர்கள். ஆறுமுகசாமி ஆணைய கமிஷன் ரிப்போர்ட் இன்றைக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதைக் கண்டு அஞ்சுகிறீர்கள். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக அந்த ஆணையம் இன்று அறிக்கை வைக்கப்படுகிறது அதை கண்டு அஞ்சுகிறீர்கள். சபையில் மக்கள் பிரச்சினையை பேச மறுக்கிறீர்கள். இது மக்கள் மன்றம். மக்களுக்கான மன்றம். மக்கள் பிரச்சினைகளை பேசுகின்ற இந்த மன்றத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு நீங்கள் கலகம் செய்யும் நோக்கத்தோடு வந்திருக்கிறீர்கள். இதனால் அவர்களை இந்த வளாகத்தில் இருந்து சபை காவலர்கள் வெளியேற்ற வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in