நேற்று வரை நடிகையை கட்டிப்பிடிச்சுட்டு இருந்த உதயநிதிக்கு, பெரியார், அண்ணா பற்றி என்ன தெரியும் - செல்லூர் ராஜு கேள்வி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

பெரியார், அண்ணா புகழை அதிமுகதான் கட்டிக்காக்கிறது என்றும் நேற்று வரை நடிகைகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த உதயநிதிக்கு பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி என்ன தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

அதிமுக சார்பில் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘’ நம்ம எடப்பாடியார் கொண்டு வந்த 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டால் தான் கிராமப்புறங்களில் படிக்கின்ற பிள்ளைகள் மருத்துவ கனவை எல்லாம் நிறைவேற்ற முடிந்தது. அம்மா 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். அதிமுக என்ற கட்சி தொடங்கின பிறகுதான் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா உடைய புகழ் இன்றைக்கும் காக்கப்படுகிறது.

நேற்று வரை நடிகைகளை கட்டிப்பிடித்து நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாவைப் பற்றி பேச தெரியுமா..? தந்தை பெரியாரைப் பற்றி பேச தெரியுமா சனாதனம் பற்றி பேசுவதற்கு இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என கேள்வி எழுப்பினார். கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கும் போது உதய நிதிக்கு மட்டும் பொறுப்பும் அமைச்சர் பதவியும் கொடுத்தது ஏன்..? அடிமட்ட தொண்டனுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் இயக்கம் தான் அதிமுக’’ என பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in