
எதிர்க்கட்சிகள் மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை பாஜக தீவிரமாக முன்வைத்து வருகிறது. இந்த சூழலில், அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர் என வாரிசு அரசியல் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக அங்கே சென்றுள்ள ராகுல் காந்தி மக்களுடன் நடைபயணம் மேற்கொண்டு, பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்தோம். தெலங்கானாவில் பாஜகவை தோற்கடிப்போம். மத்திய பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிப்போம். சத்தீஸ்கர் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம். கடந்த முறை ராஜஸ்தானில் பாஜகவை தோற்கடித்தோம், இந்த முறை மீண்டும் தோற்கடிப்போம். வடக்கு கிழக்கிலும் அவ்வாறே செய்ய திட்டமிட்டுள்ளோம்.
நீங்கள் வாரிசு அரசியல் குறித்து பேசுகிறீர்கள். ஆனால், அமித்ஷாவின் மகன் என்ன செய்கிறார்? ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? நான் இதை உங்களிடம் கேள்வியாய் கேட்கிறேன். நான் கேள்வி பட்டது அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார் என்று. எனவே கேள்விகளை சரியாக கேளுங்கள். பாஜக தலைவர்களை பார்த்து உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகளை கேளுங்கள். அனுராக் தாக்கூர் உட்பட பாஜகவினரின் வாரிசுகள் அனைவரும் வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்” என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்
பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!
தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!