தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை அறிவிப்பு

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை அறிவிப்பு

2023-24-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை அறிவிப்பு. இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்படும்.

* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவை தொடங்கப்படும்

* விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் 410 கோடியில் 4 புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். நான்கு சிப்காட் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் சுமார் 2.2 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்

* பழநி, திருத்தணி, சமயபுரம் கோயில்களில் 485 கோடியில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

* வரும் நிதி ஆண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்

* 621 கோடியில் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை வரை நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும்

* மூன்று ஆண்டுகளில் வட சென்னையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

* சென்னையில் பேருந்து பணிமனைகளை தரம் உயர்த்த ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் 8 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். மதுரையின் மையப் பகுதியில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ திட்டம் திருமங்கலம்- ஒத்தக்கடை வரை நீட்டிக்கப்படும்

* கோவையில் 9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்

* சென்னை பூந்தமல்லி- கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் 2025-ல் நிறைவு பெறும்

* பொது விநியோகத் திட்டத்தின் உணவு மானியத்திற்கு 10,500 கோடி ஒதுக்கீடு

* கடந்த ஆண்டை விட 20,470 மாணவிகள் உயர் கல்வியில் அதிகமாக சேர்ந்துள்ளனர். ஆயிரம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் காரணமாக உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையை அதிகரித்துள்ளது.

* உயர் கல்வியில் சேரும் மாணவிகள் 2.2 லட்சம் பேர் ஆயிரம் உதவி தொகை பெற்று வருகின்றனர்

* மகளிர் சுய உதவி குழுவுக்கு 30,000 கோடி கடன் வழங்க இலக்கு

* தெரு நாய்களுக்கான இனவிருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க பத்து கோடி ஒதுக்கீடு

* விவசாய கடன் தள்ளுபடிக்கு 20,393 கோடி; நகைக்கடன் தள்ளுபடிக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* 4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீனவர் நலத்திட்டங்களுக்கு 389 கோடி ஒதுக்கீடு

* கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு 16 ஆயிரத்து 262 கோடி ஒதுக்கீடு

* ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் அமைய உள்ள 18-வது சரணாலயம் இது.

* கடல் அரிப்பை தடுக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும்

* மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் 25 கோடியில் அமைக்கப்படும்

* தமிழக அரசு சார்பில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும்

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழ்நாட்டின் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்

* சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் 25 கோடியில் சீரமைப்பு பணியில் மேற்கொள்ளப்படும்

* மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் வரும் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு உதவி தொகையாக ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு.

* வரவு செலவுத் திட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* நடப்பு கல்வி ஆண்டில் உயர்கல்வித்துறைக்கு 6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

*ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு 3,513 கோடி ஒதுக்கீடு

* 26 தொழில்நுட்ப கல்லூரிகள், 55 கலை கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க 200 கோடி ஒதுக்கீடு

* மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதி திராவிட மாணவர்களுக்காக ஆயிரம் கோடியில் விடுதிகள் அமைக்கப்படும்

* மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம் 1500 இருந்து 2000 ஆக அதிகரிப்பு

* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான 120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

* குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு முதுநிலை தேர்வுக்கு தயாராக 7500 வழங்கப்படும்.

* முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

* 15 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* திமுக அரசின் இரண்டு ஆண்டுகால தொடர் முயற்சியால் மாநில அரசின் வருவாய் 6.11 சதவீதமாக அதிகரிப்பு

* 811 தொழிற்சாலைகளில் மக்களை தேடும் மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்

* சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்நோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் திறக்கப்படும்.

* மருத்துவத்துறைக்கு பட்ஜெட்டில் 18,661 கோடி நிதி ஒதுக்கீடு

* ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவு அமைக்கப்படும்.

* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை மேம்படுத்த 40 கோடி நிதி ஒதுக்கீடு

* ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம், செவிலியர் விடுதி கட்டப்படும்

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கட்ட 1,500 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இருமடங்காக 40 லட்சமாக உயர்வு.

* சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்

* அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஆண்டிலும் புத்தக கண்காட்சி தொடர்ந்து பத்து கோடியில் நடத்தப்படும்

* சென்னை பெருவெள்ளம், கொரோனா உள்ளிட்டவற்றை சந்தித்தபோது நிதி நெருக்கடி அதிகம் ஏற்பட்டது

* 2006- 2011-ல் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதமாக இருந்த மாநில வரி வருவாய் 2021-ல் திமுக ஆட்சி வருவதற்கு முன் 5.5 சதவீதமாக இருந்தது.

* 110 கோடி செலவில் 4, 5-ம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்

* தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்.

* சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

* தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* இலங்கைத் தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்ட 239 கோடி நிதி ஒதுக்கீடு.

* தாய் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்

* அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக அவருடைய படைப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். இதற்காக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

* எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அமளி.

* குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்ற பெருமையுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in