பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 2 பரிசுகள் என்ன?

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 2 பரிசுகள் என்ன?

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு பரிசுகளை வழங்கியுள்ளார்.

ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கான வளர்ச்சி குறித்து பிரதமருடன் முதல்வர் பேசினார்.

இந்த சந்திப்பின்போது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த “Home of Chess” என்ற புத்தகத்தை வழங்கினார். அப்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், தமிழகத்தின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு பரிசாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in