முன்னாள் அதிமுக அமைச்சர் மீதான ஊழல் புகார்... என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?... உயர்நீதிமன்றம் கேள்வி!

முன்னாள் அமைச்சர் காமராஜ்
முன்னாள் அமைச்சர் காமராஜ்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள வ.புகழேந்தி புகார் அளித்திருந்தார்.

2018-ம் ஆண்டு புகார் அளித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார்களின் மீது விசாரணை நடந்து வருவதாகவும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 31 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

புகழேந்தி அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட விசாரணை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதி ஒத்தி வைத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in