`உங்கள் எம்எல்ஏக்கள் 2 பேரையும் தூக்கிவிடுவோம்'- பாஜகவை அதிரவைத்த திமுக எம்பி

`உங்கள் எம்எல்ஏக்கள் 2 பேரையும் தூக்கிவிடுவோம்'- பாஜகவை அதிரவைத்த திமுக எம்பி

திருச்சி சிவா எம்பியின் மகன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், இரண்டு பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம் என்று திமுக எம்பி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை பதற்றவைத்துள்ளது.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி வந்த நிலையில், நேற்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா சிவா, "திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்" என கூறியிருந்தார்.

இந்நிலையில், தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், இரண்டு பாஜக எம்எல்ஏக்களை தூக்க இருப்பதாக ட்வீட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக. உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.