`நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்'- அண்ணாமலையை எச்சரிக்கும் அன்புமணி!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

``தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரியாரை இழிவுப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்; தொடர்ந்து இழிவுப்படுத்தினால் நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோயில்களின் முன் இருந்து அகற்றப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு திமுக, பெரியார் இயக்கங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இதேபோல அதிமுகவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘’தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. இது எங்களுடைய பாமகவின் முன்னோடிகளாக 3 பேரை வைத்துள்ளோம். ஒன்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் கார்ல் மார்க்ஸ். ஆகிய 3 பேரை பற்றி தவறாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்’’ என எச்சரித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக அணியில் பாமக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், அன்புமணியின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாமக, பாஜக அணியில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in