`இந்தியை எந்த விதத்திலும் நுழைய விடமாட்டோம்'

ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை வரவேற்ற ஜெயக்குமார்
`இந்தியை எந்த விதத்திலும் நுழைய விடமாட்டோம்'

தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என்றும் தமிழ்நாட்டில் இந்தியை எந்த விதத்திலும் நுழைய விடமாட்டோம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.

5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் எனவும் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை எனவும் கூறினார்.

உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம் என்று கூறிய அவர், ஏ.ஆர் ரகுமானின் தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயல் எனவும், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசத்தால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்திருப்பதாகவும் அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருந்த டெண்டர், தி.மு.க ஆட்சியில் தி.மு.க-வினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட நபர்களுக்கே அனைத்து டெண்டர்களும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in