`நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை'- கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன் `நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை'- கமல்ஹாசன்

"நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. அதற்கு பதிலாக கை சின்னத்தில் மை வைத்தால் போதும்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தற்போழுது மய்யம் என்பது நடுநிலையோடு இருப்பதல்ல. கொள்கை முரண்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு மக்களின் நலனுக்காக எது நியாயமோ அதற்காக ஒன்றாக இணைவதுதான் மய்யம். நான் யோசித்து பேசுகிறவன். பல விமர்சனங்களை கேட்டுவிட்டுத்தான் இது சரியான பாதை என்று இந்த பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறேன்.

ஆங்கிலேயர்கள் செய்த அதே பிரிவினை விளையாட்டை மீண்டும் செய்ய முடியாது. ஏனெனில் அதற்கான ஒத்திகையை முடித்து அவர்களை அனுப்பி வைத்து விட்டோம். கிழக்கு இந்தியா கம்பெனி முடிந்து போய் தற்போது வட இந்தியா கம்பெனி உருவாகியுள்ளது. நமது நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க முன்னோடி பணிகளை செய்த காங்கிரசு கட்சியை சார்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்!" என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in