`இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்; ஏ.ஆர்.ரகுமான் கருத்தை ஆதரிக்கிறோம்'

சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
`இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்; ஏ.ஆர்.ரகுமான் கருத்தை ஆதரிக்கிறோம்'
Updated on
1 min read

இந்தி திணிப்பதை தமிழக பாஜக ஏற்காது என்றும் ஏ.ஆர்.ரகுமான் கருத்து சொல்வதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களுடைய நிலைபாடு இந்தி திணிப்பதை தமிழக பாஜக ஏற்காது. குறிப்பாக நமது தேசிய கல்விக்கொள்கை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் தமிழ் மொழியில்தான் நீங்க படிக்க வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வராதபோது, மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள்கூட இத்தனை ஆண்டுகளாக கொண்டுவரவில்லை. கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தபோது ஏன் கட்டாய தமிழ் கல்வியை கொண்டு வரவில்லை. அதற்கு ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டாரா?

ஏ.ஆர்.ரகுமான் கருத்து சொல்வதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. அதே நேரத்தில் ஏ.ஆர்.ரகுமான் சொன்ன கருத்து அமித் ஷாவுக்கு எதிராக கருத்து அல்ல. ஒரு தமிழனாக நம்முடைய கருத்தை சொல்வதில் பெருமைப்படுகிறோம். எங்களுடைய மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. அமித் ஷாவின் பேச்சை ஒரு கருத்தாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். தமிழக பாஜகவின் ஆசை, விருப்பம் இந்தியாவின் இணைப்பு மொழிகளில் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்பதுதான்.

அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் ஆழமாக நான் போகவிரும்பவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இன்று தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். அதற்கு முதல்வர் பதில் அளித்த விதம் சரியில்லை. முதல்வருக்கும், ஒரு கட்சித் தலைவருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஆனால் இன்று, சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வராக அவரது பதில் இல்லை. திமுக தலைவராகத்தான் அவரது பதில் சட்டப்பேரவையில் இருந்தது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு விரோதப் பாேக்கை எடுத்து, சண்டையை ஏற்படுத்தி அதன் மூலமாக குளிர் காய்ந்துவிடலாம் என முதல்வர் நினைத்தால் நாங்கள் என பண்ண முடியும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in