`இன்னும் 10 ஆண்டுகளில் கருப்பு சட்டை அணிய முடியாமல் போகலாம்'- திருமாவளவன் பரபரப்பு பேச்சு

`இன்னும் 10 ஆண்டுகளில் கருப்பு சட்டை அணிய முடியாமல் போகலாம்'- திருமாவளவன் பரபரப்பு பேச்சு

`இன்னும் 10 ஆண்டுகளில் கருப்பு, சிவப்பு சட்டை அணிய முடியாமல் போகலாம்' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய 'வாழும் வரைக்கும் வள்ளுவம்' நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை பெரியார் திடலில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று உரையாற்றிய தொல் திருமாவளவன், "பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற ஒரு இயக்கத்தை தடை செய்து இருக்கிறார்கள். கேட்டால் அந்த இயக்கம் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் 10 குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய இயக்கம் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட வேண்டுமா, வேண்டாமா?

தமிழ்நாட்டில் இந்த குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமா, வேண்டாமா?. நாம் வழக்கம்போல் அமைதி காத்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கருப்பு, சிவப்பு சட்டையை போட்டு நாடமாட முடியாது. அச்சுறுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் யூகமாக சொல்லவில்லை, ஆதாரத்துடன் சொல்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in