‘பாரத் ஜோடோ யாத்திரைக்கு இதுவரை எங்களை அழைக்கவில்லை’ - சீதாராம் யெச்சூரி

‘பாரத் ஜோடோ யாத்திரைக்கு இதுவரை எங்களை அழைக்கவில்லை’ - சீதாராம் யெச்சூரி

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் இணைவதற்கு காங்கிரஸ் கட்சியிடமிருந்து அழைப்பு வரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “உத்தர பிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, “நாங்கள் இதுவரை அழைப்பைப் பெறவில்லை” என்றார்.

முன்னதாக, “ஜனவரி 3-ம் தேதி ராகுலின் வருகைக்காக காத்திருக்கிறோம். முதல்கட்ட பயணத்திட்டத்தில் உத்தரபிரதேசம் இடம்பெறவில்லை. ஆனால், மூன்று மாவட்டங்களை இப்போது திட்டமிட்டுள்ளோம். ராகுல் காந்தி காஜியாபாத், பாக்பத் மற்றும் ஷாம்லி ஆகிய இடங்களுக்கு வருவார். இந்த யாத்திரையில் பதினோராயிரம் பேர் இணைவார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களும் யாத்திரையில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்” என்று சல்மான் குர்ஷித் கூறினார்.

செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை சென்றுள்ளது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு காஷ்மீரில் முடிவடையும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in