பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! பின்வாங்கிய செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"மோடி மீண்டும் பாரதப் பிரதமராக வருவார். தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும். பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணா காலத்திலே சனாதனம் ஒழிக்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் வந்தது. சீர்திருத்த திருமணங்களை அண்ணா செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டது. இன்றைக்கு அ.தி.மு.க.வில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் தலைவராக உள்ளார். இதேபோல் தி.மு.க.வி.ல் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களையும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக முடியுமா? பாஜகவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம். தேவருக்கு தங்கக் கவசத்தை ஜெயலலிதா வழங்கினார். கர்நாடகா தேர்தலில் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்குவோம் என கூறினார்கள். தற்போது ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. இதில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு மீதி பேருக்கு வழங்கவில்லை. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மோடிஜி கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸால் கொண்டு வர முடியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in