`இப்போது ஆடியோ, அடுத்து வீடியோ வெளியிடுவேன்'- கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பகிரங்க மிரட்டல்!

கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி
கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி `இப்போது ஆடியோ, அடுத்து வீடியோ வெளியிடுவேன்'- கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பகிரங்க மிரட்டல்!

’’ கே.பி.முனுசாமி குறித்த வீடியோ உள்ளது. ஓபிஎஸ் குறித்து அவதூறு பேசினால் வெளியிடுவோம்’’ என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ’’சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா?’’ என விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை பசுமைவழிச் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். கே.பி. முனுசாமி தன்னிடம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதற்கு 50 லட்சம் கேட்டதாக குற்றம்சாட்டி அந்த ஆடியோவை வெளிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘’ 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கூறினார்.

என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in